அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

திட்டை குரு ஸ்தலம் சில குறிப்புகள்


1. தலத்தின் பெயர் : திட்டை குரு பரிகார ஸ்தலம்

2.

இறைவன் பெயர்

:

அருள்மிகு வசிஸ்டேஸ்வரர்
3. வேறு பெயர்கள் :
பசுபதீஸ்வரர், தான்தோன்றிநாதர், அனந்தேஸ்வரர், தேரனார்.

4. இறைவியின் பெயர் : உலகநாயகி என்னும் மங்களாம்பிகை, சுகந்த குந்தளாம்பிகை.
5. சிறப்பு மூர்த்தி :

குருபகவான் தனி சந்நிதியின் தனி விமானத்துடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையில் இராஜகுருவாக எழுந்தருளியுள்ளார்.

6. எப்படிப் போவது ? : தஞ்சை நகரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் 10 - வது கிலோமீட்டரில் திட்டை உள்ளது.
7. வேறு சிறப்பு :
மற்ற குரு ஸ்தலங்களில் தெட்சிணாமூர்த்திக்கே குருபெயர்ச்சி நடத்தப்படுகிறது இத்தலத்தில் மட்டும்தான் குருவுக்கு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது.
8.
போக்குவரத்து வசதிகள் எப்படி?
: தஞ்சையிலிருந்து டவுண் பஸ்கள் நிறைய உண்டு. ஆட்டோ மற்றும் டாக்ஸி மூலமும் செல்லலாம்
9.
தங்குமிடம் உணவு வசதிகள் உண்டா?
:
தஞ்சை நகரில் ஏராளமான தங்கும் விடுதிகளும், தரமான உணவு விடுதிகளும் உள்ளன. திட்டை சிறுகிராமமானதால் போதுமான வசதிகள் அங்கு இல்லை.
10. எப்போது வரலாம்? :

குருவாரமான வியாழக்கிழமையில் வழிபடுவது சிறப்பு குருபெயர்ச்சி காலங்களில் நாடெங்கும் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு பரிகாரம் செய்து செல்கின்றனர்.

11. யாருக்கு நற்பலன்? : 2, 3, 5, 7, 9, 11. இடத்தில் இருப்பவர்க்கு.
12.
பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டியவர்கள் யார்?
: 1, 2, 4, 6, 8, 10, 12 இடத்தில் இருப்பவர்க்கு.
13. பரிகாரம் என்ன ? :
குருப்பெயர்ச்சியில் இருந்து 21 நாட்கள் வரை திட்டை குருபகவானைத் தரிசித்து அர்ச்சனை செய்யலாம். அக்கோயிலில் நடக்கும் இலட்ச்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு கொள்ளலாம்.
14.

நேரில் வரமுடியாதவர்கள் என்ன செய்வது? :நேரில் வரமுடியாதவர்கள் இலட்ச்சார்ச்சனைக்கு ரூ.300/- பரிகாரஹோமத்திற்கு ரூ.500/- மணி ஆர்டர் அல்லது. டி.டி. அனுப்பினால் அர்ச்சனை / சங்கல்பம் செய்து கூரியர் மூலம் பிரசாதம் அனுப்பு வைக்கப்படும்.(குருபெயர்ச்சியின் போது மட்டும் )

15. நடை திறந்திடும் நேரம் : காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
16. தொடர்பு முகவரி என்ன? :
செயல் அலுவலர் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (குருபகவான் பரிகாரதலம்). திட்டை - 613 003, தஞ்சாவூர் மாவட்டம்.
17. தொலைபேசி எண் :
04362 - 252858


திட்டைக்கு வருக ! தி (கு)ருவருள் பெறுக !