அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.


புராண வரலாறு

இத்தலத்தின் புராண வரலாற்றில் இங்கே வந்து வழிபடாதவர்களே இல்லை என்னும், அளவிற்கு சிவலோகமே திரண்டெழுந்து வணங்கிய புண்ணியத் ஸ்தலம் திட்டை.அருள்மிகு வசிஸ்டேஸ்வரர் திருக்கோவில் (குரு) கதிரவன் அதிபதியாக அமையவும், பேருமலையைச் சுற்றி வளம் வந்து உலகை ஒளி வீசிக் காக்கும்படியான வரத்தையும், ஆதிசேஷன் பூமியை பூவாக எளிதில் தாங்கும் வல்லமையைப் பெற்றதும், வசிஷ்டர் பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனதும், காமதேனு புத்திரிகளாகிய நந்தினி, கமிலினி, பேறுபெற்றதும், பைரவர் கேத்திர தீர்த்த பாலகர் ஆனதும், எமன் தென்திசைக்கு தலைவன் ஆனதும், சனி நவகிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றதும், திருமாள் மதுக்கடைபவர்களை வெல்லும் ஆற்றல் பெற்றதும், பிரம்மன் உலகைப் படைக்கும் வல்லமையை அடைந்ததும், இத்தல இறைவனின் அருளால்தான் எனப்படுகின்றது. அகவினி தேவர்கள் இந்திரன், வசிட்டர், கௌதமர் முதலானவர்களும் வழிபட்டுருக்கின்றனர். நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வணங்கித்தொழுது தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்க்கு காரணமாக நின்ற ஊர் தென்குடித் திட்டை. இதை முன்னை நான்மறையவை முறை குறையோடும் தன்னைத்தான் தொழுதெழ நின்றவன் என்ற திருஞான சம்பந்தர் வாக்கில் காணமுடிகிறது. நவகிரங்கள் ஒன்றுகூடி இறைவனை வணங்கிய ஸ்தலம் , சனி பகவானுக்கு பரிகாரம் செய்யவும் உகந்த ஸ்தலம். "ஓம் கம் நம்ஹ பிதாமகாயஞ" என்று நவா க்ஷார மந்திரத்தை அகத்திய முனிவர் உபதேசித்த புண்ணிய ஸ்தலம்.


திருக்கோவில் அமைப்பு

ஞானக்கோயில் எனப்படும் இக்கோயிலின் அமைப்பே அலாதியான சோபையுடன் காணப்படுகிறது. எங்கும் கருங்கற் திருப்பணியாகவே இருக்கிறது. மூலவர் விமானம், அம்பிகை விமானம், என்றில்லாமல் விநாயகர், முருகன், நடராஜர், பைரவர், தேவகுரு என்று எல்லாப் பரிவார தெய்வங்குளுக்கும் கருங்கல் விமானம் அமைந்திருப்பது வேறு எங்கும் காண முடியாத, இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு, இத்திருக்கோயிலில் சுதை வேலைப்பாடுகளே இல்லை, பெரும் பொருட்செலவில் முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்ட கோயில் இது, கட்டிடக்கலைக்கு முக்கிய எடுத்துக்காட்டு இக்கோயில். சூரிய, சந்திர காந்தக் கற்களால் கட்டப்பட்டது இக்கோயில், இக்கற்கள் சூரிய ஔயினிரல் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, கல்லிலிருந்து ஈரத்தை நீராக மாற்றி சிவனுக்கு இருபத்தி நான்கு நிமிடத்திற்கு ஒரு முறை அபிஷேகம் செய்கிறது. கற்களுக்கு அற்புத குணங்கள் உண்டு என்பதை விஞ்ஞானப் பூர்வமா உணர்த்தும் ஒரே தலம் திட்டை. கருவறையில் உள்ள மூல லிங்கம் தவிர கோயிலின் நாற்றிசை திருச்சுற்றுகளிலும் நான்கு சிறந்த சிவலிங்க வடிவங்கள் காணப்பெறுகின்றன. இதன் காரணமாக இத்தலம் பஞ்சலிங்க கேத்திரம் எனப்படுகிறது. இவற்றில் ஒரு லிங்கம் 32 பட்டை வடிவில் காணப்பெறுகிறது. மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தின் கீழ்பாகம் சதுரமாகக் காட்சி அளிக்கிறது.


தலவரலாறு

இத்தலம் தஞ்சாவூர் வட்டம், பள்ளி அக்கிரகாரத்திலிருந்து மூன்றாவது கிலோ மீட்டரில் திட்டை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது இது திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற தலமாகும். காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற சிறப்புமிக்கத் தலம். திட்டை என்ற சொல்லுக்கு திட்டு அல்லது மேடு என்பது பொருளாகும். மேடு என்பதை ஞானமேடு என்றும் பொருள்கொள்ளலாம். ஆதிப்பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது. மும்மூர்த்திகளும் முக்குணங்களுக்குக் கட்டுப்பட்டு நீழ் சூழ்ந்தும். இருள் கவிழ்ந்தும் இருந்த இந்த பிரமாண்டத்தைப் பார்த்து அஞ்சினர். பரம்பொருளைள பலவாறு துதித்தனர். பார்வதி பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் ஊழிப்பெருவௌ்ளத்தின் நடுவே மேருமலைக்குத் தென்புறம் 10 மைல் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர். அம்மேட்டுப் பகுதியில் ஜோதிமயமான லிங்கத்தைக்கண்டு பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளுக்கும் அபயமளித்துப் படைத்தல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில்களையும் அதற்கான சக்தி பெறும் அறிவையும் அவர்களுக்கு அருளினார்.


அழியா ஸ்தலம்

ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல ஸ்தலங்கள் மீண்டும் பிரளயத்தில் மூழ்கி பின் தோன்றின .ஆனால் இத்தலம் மட்டும் அழியாமல் தொடர்ந்து நிலைப்பெற்று வருகிறது ஊழிக்காலத்திலும் அழியாதபெருமை உடையது இத்தலம்.


பஞ்சலிங்க ஸ்தலம்

கயிலாயம்,கேதாரம், காசி, ஷ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு ஸ்தலங்களின் வரிசை 22-வது ஸ்தலமாக விளங்குவது தென்குடித் திட்டை. இத்திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியிலுள்ள வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளார். எனவே பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக உள்ளது. திருக்காளத்தி திருஅண்ணாமலை, திருவானைக்கோயில், சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற பஞ்சபூத ஸ்தலங்களும் ஒருங்கிணைந்த ஸ்தலமாக திட்டை அமைந்துள்ளது. நவகோள்களில் மூன்று கிரகங்கள் இத்தல வரலாற்றில் இணைத்துப் பேசப்படுகின்றன. நவக்கிரகங்களின் தலைவனான சூரியன் சிவபக்தரான சுமாலியைக் கொன்றதால், பாவம் வருமே என்று பயந்து இத்திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரைப் பூஜித்து கடுந்தவம் புரிந்தான். இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி நவக்கிரங்களின் அதிபதியாகவும் காலச்சரக்கரத்தை நடத்திச் செல்லவும் அருள் புரிந்தார்.


திருவிழாக்கள்

இத்தலத்தில் சித்திரா பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வருடந்தோறும் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


ENGLISH VERSION

Composite Thanjavur District is unique in having all the Navagraha Kshetras. The shrine for Guru Bhagawan is at Alangudi-Sri. Abathsaha-yeswaraswamy temple near Needamangalam (Now in Thiruvarur District) But yet another equally important temple for Guru is at Thittai-Sri.Vasishteswarasswmy temple, near Thanjavur. Located at the tenth Kilometer on the Thanjavur – Thirukarugavur road, the temple is unique in having a separate temple inside the main temple for guru. Even in alangudi, Dakshinamurthy on the southern side of the temple is worshipped as Guru Bhagawan, Whereas at Thittai, Guru is seen in a separate temple.

The Word Thittai means “Thittu” in Tamil which means a mound. Legend has it that the whole world was surrounded by water during “Pralaya” The three gods going the duty of creation, protection and destruction worshipped Maheswara for protection. After wandering, they reached a “Thittu” (mound) south of Mahameru.

Maheswara appeared before them in the form of Jothi and gave them their duties. The place came to the known as “Thenkudi Thittai” and Maheswara as Swayambootheswarar and his concert Ulaga Nayagi.

Sri.Vasishteswaraswamy temple is ancient and the principal deity Vasishteswarar gets his name because he was worshipped by saint Vasishtar.

The Temple is also one oif the important Sakthi Peetams. Legend has it that a Vaisya girl, who lost her husband, got back his life and lived with him after worshipping Ulaga Nayagi. It is said that yet another girl Sugantha Kunthala also got back her deceased husband after worshipping Ulaga Nayagi. Hence the Goddess is also called Sugantha Kunthalambigai.

Another unique feature of the temple is that drops of water fall on the Lingam from above on every twenty minutes. It is said that this is because of the presence of the precious stones called “Surya kantha Kal” and “Chandra Kantha Kal” in the vimana which absorb moisture from air and create water in them. And it is this water generated by the stones that falls down in drops.

The temple has a tank called “Chakra Theertham” in the front. It is said that this theertham was created by the Chakra of Mahavishnu.

திட்டைக்கு வருக ! தி (கு)ருவருள் பெறுக !

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகத்தில் மகாப்ரளயம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பிரளம் ஜனத்தினரல் சூழப்பட்டது. உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அத்தகைய தருணத்தில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனின் திருவருளால் ஊழிப்பெருவெள்ளத்தின் மத்தியில் சுமார் பத்து மைல்கள் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதி மட்டும் நிலைத்திருத்தது. அம்மேட்டுப்பகுதியில் கோடி சூரியன் ஒரே சமயத்தில் உதையமானரற்போல் ஜோதிமயமான சிவலிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்திலிருந்து காட்சி தந்த சிவபெருமான் வேத வேதாந்த சாஸ்திர அறிவை அனைத்து உலகங்களுக்கும் தந்தருளினார். இறைவன் சுயம்புவாக அந்த மேட்டுப் பகுதியில் தோன்றியதால் ஸ்வயம்பூதேஸ்வர் (தான்தோன்றீஸ்வரர்) எனப் பூஜிக்கப்பட்டார். முதன் முதலில் வசிஷ்ட மகரிஷி இங்கு வந்து தவம் புரிந்து இறைவனைப் பூஜித்து பிரம்மஞானிகளில் முதன்மை பெற்றவராக விளங்கினார்.

வசிஷ்ட மகரிஷிக்கு அருள்புரிந்த காரணத்தினால் இத்திருத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்த இத்திருத்தலம் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பெருமை பெற்ற தலமாகும். திருக்கயிலாயம், கேதாரம், காசி, ஷ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்புத் தலங்களின் வரிசையில் 22-வது சுயம்புத் தலமாக விளங்குவது தென்குடித்திட்டை. திட்டை என்ற சொல்லுக்கு திட்டு அல்லது மேடு என்பது பொருளாகும். தென்குடி என்பது மனித உடல் திட்டை என்பது ஞானமேடு. மனித உடலில் மூலாதாரம் முதல் ஆன்ஞை உள்ளிட்ட ஆறு ஆதாரங்கள் பொருந்தியுள்ளன. முதலில் இறைவனைப் பற்றிய ஐய உணர்வு போன்றிகிறது. ஐயம் தெளிந்தபின் மெய்யுணர்வு தோன்றியது. இப்படி ஊரின் பெயரிலேயே ஞானமார்க்கம் மறைந்திருப்பது உணரத்தக்கது.


சக்கர தீர்த்தம்

இத்திருக்கோயிலில் எதிரில் அமைந்துள்ள சக்கர தீர்த்தம் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் உருவாக்கப்பட்டது. அனைத்துப் பாவங்களையும் போக்கவல்லது இந்தச் சக்கர தீர்த்தம். தீர்த்தத்தில் பக்தியுடன் புனித நீராடினால் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய பெருமான்களின் பேரருளைப் பெறலாம்.


சூல தீர்த்தம்

முன்னொரு காலத்தில் தண்டகனத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. கதிரவனின் கடும் கிரணங்களினால் குளங்களும், குட்டைகளும் வறண்டன. மழை பொய்த்தது. தெய்வாதீனமாக இந்தத் திட்டை திருத்தலத்தை வந்தடைந்த பசு, குதிரை, ஆடு, மாடு, முதலிய மிருகங்கள் தாகத்தினால் தொண்டை வறண்டு துன்புற்று வாடியதைக் கண்ட சிவபெருமாள், தன் சூலத்தால் பூமியைத் தோண்டி குளம் ஒன்றை உருவாக்கி அதில் தனது சிரசிலிருந்து கங்கை நீரை விட்டு நிரப்பினார். இறைவனின் சூலத்தால் உருவாக்கப்பட்டால் இக்குளம் சூலதீர்த்தம் எனப் பூஜிக்கப்பட்டது. அம்பிகை - மங்களாம்பிகை தரிசித்துப் பூஜிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் தரக்கூடியவள். மாங்கல்ய பலத்திற்கும் குடும்ப ஒற்றுமைக்கும் ரப்பிரசாதி இந்த மங்களாம்பிகை.


சந்திரனின் அபிஷேகம்

மூலவர் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரனின் விமானத்தில் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து குளிர் கிரணங்களை அந்தக் கல் ஈர்த்து அந்தக் கிராணங்கள் நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது நித்ய அபிஷேகம் நடைபெறும் அதிசயத்தை இன்றும் காணலாம்.


சிறப்பு குருபகவான்

சுவாமிக்கும் அம்பிகைக்குமிடையில் தனிச்சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரங்களில் பூரண சுபக்கிரகமான குருபகவான்.


இறைவி உலக நாயகி

இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவி உலகநாயகி என்னும் மங்களாம்பிகை அனைத்து களங்களையும் தரக்கூடியவள். இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளாள். மாங்கல்ய பலத்திற்கும், குடும்ப ஒற்றுமைக்கும் வழிபட வேண்டிய அன்னை இவள். சிறப்பு மூர்த்தி குருபகவான் நவக்கிரங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளைக்கூடத் தனது சுபப்பார்வையினால் தடுத்து நிறுத்தும் வல்லமை பிரகஸ்பதி என்று அனைவராலும் போற்றப்படும் குருபகவானுக்கு உண்டு.

எல்லாச் சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞானவடிவான ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி கோயில் கொண்டிருப்பார். சிவகுரு ஸ்தலங்களில் இந்த தெட்சிணாமூர்த்தியே குருவாகப் பாவித்து வழிப்படப்படுகிறார்.

ஆனால், தென்குடித்திட்டையில் ஸ்ரீ குருபகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் கிடையாது என்பதும் அறியத்தக்கது.

ராஜயோகம் தரும் திட்டை ராஜகுருபகவான்

" நாரணன் தன்னோடு நான்முகன் தானுமாய்

காரணன் அடிமுடி காண ஒன்னானிடம்

ஆரணங்கொண்டு பூசுரர்கள் வந்தடிதொழ

சீரணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே ! "

திருஞானசம்பந்தர்தேவாரம்

மூர்த்தி, தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினார்க்கு ஓர் வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே ! என்பது தாயுமானவர் வாக்கு.


அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் (மூர்த்தி)

ஆதிப்பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது. மும்முர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும் இருள் கவிந்தும் இருந்த உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு துதித்தனர். பார்வதி பரமேஸ்வரனின் அருளால் ஊழிப்பெருவௌ்ளத்தின் நடுவின் பத்து மைல் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதியைக் கண்டு வியந்தனர். அம்மேட்டுப்பகுதிலயில் ஜோதிமயமான லிங்கத்தை கண்டு பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவினையும் அருளினார். இறைவன்சுயம்புவாக தோன்றியதால் ஸ்வயம்பூதேஸ்வரர் (தான்தோன்றீஸ்வரர்) என அழைக்கப்பட்டார், வசிட்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.


தென்குடித்திட்டை (தலம்)

சம்பந்தப்பெருமானின் பாடல்களை வசதி கருதி இருவகையாகப்பிரிக்கலாம்.
1. தலத்து இறைவனைப்பாடியவை
2. தலத்தைப் பாடியவை
தலத்து இறைவனைப்பாடும் போது இங்கு இருக்கும் இறைவன் இன்னின்ன பெருமைகளை உடையவன் எனச் சிறப்பித்துப்பாடுவது, தலத்தைப் பாடும் போது இத்தகைய இறைவன் ிரும்பித்தங்கியிருக்கும் இடம் எதுவென்று கேட்பீராகில் இன்னதலேம என்று தலத்தின் பெருமையை உயர்த்திப்பாடுவதாக அமையும். இரண்டாவது முறையினைப் பின்பற்றி தென்குடித்திட்டை தலத்தைச் சிறப்பித்து சம்பந்தப்பெருமான் ஒரு பதிகம் பாடியுள்ளார்.


சந்திரனின் அபிஷேகம்

மூலவர் வசிஷ்டேஸ்வரரின் விமானத்தில் சந்திரகாந்தக்கல், வைத்துக் கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெறுகிறது. அந்தக்கல், அது நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை இப்போது காணலாம். அபிஷேக பிரியனான சிவனுக்குச் சந்திரனின் நித்யாபிஷேகம். தினம் ஒரு கலையாக தேய்வதற்குச் சாபம் பெற்ற சந்திரனைக் காப்பாற்றி தன் சிரசில் வைத்து சிவன் சந்திரசேகரர் ஆனார். அதற்கு நன்றிக்கடனாகச் சந்திரன் தன் அபிஷேகத்தைக் காலம் காலமாகச் செய்து வருகிறான்.


சனி பகவான்

சனிபகவான் பிறந்ததில் இருந்து அவரது பார்வையில் தீட்சண்யம் இருந்தது. அவரது பார்வையிட்ட இடங்களில் பல விபரீதங்கள் நிகழ்ந்தன. விநாயகப்பெருமான் பிறந்தநாள் விழாவைக் காண சனி பகவான் கைலாயம் சென்றார். அவர் பார்வை பட்டதால் விநாயகருக்குத் தலைபோகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பார்வதி தேவியார் சனீஸ்வரனைச் சபித்தார்.

சனி பகவான் திட்டைக்கு வந்து வேதமுறைப்படி இறைவனைப் பூசித்து ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து வந்தார். அவர் தவத்துக்கு மெச்சி இறைவன் அவரை கிரகநாதனாக அமர்த்தி அனுக்கிரகம் செய்தான்.

எனவே, சனிதோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம், அஷ்டமச்சனி மற்றும் ஏழரை நாட்டுச்சனியின் பிடியில் இருப்பவர்கள் திட்டைக்கு வந்து பசு தீர்த்ததில் நீராடி பசுபதீஸ்வரரைத் தரிசித்து இங்குள்ள நவக்கிரகத்தினை வலம் வந்து சனி பகவானை அர்ச்சனை செய்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.


சூரியன்

சிவ பக்தனான சுமாலியைக் கொன்றதால் பாவம் வரும் என்று பயந்த சூரிய பகவான் திட்டைதலத்துக்கு வந்து இறைவனை நினைத்து கடுந்தவம் புரிந்தான்.இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி சூரியனை கிரகநாதனாக அமர்த்தி காலசக்கரத்தை நடத்திச்செல்ல அனுமதி அளித்தான்.

சிம்மராசியில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள். இங்கு வந்து வழிபட நலம் பெறுவார்கள்.


நற்பலன்கள் யாருக்கு ?

ஒருவருடைய ஜென்மராசியில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் குருபகவான் வரும் போது நற்பலன்கள் நடக்கும்.


பரிகார செய்ய வேண்டியவர்கள் யார் ?

ஒருவருடைய ஜென்மஇராசியான 1ஆம் இடம் மற்றும் ஜென்ம இராசியில் இருந்து 3, 4, 6, 8, 10 ,12 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சரிக்கும் போது நற்பலன்களைத் தரமாட்டார் என்பது பொது விதி.


குருபரிகார ஹோமங்கள்

மேலும் இத்திருக்கோயிலில் எளிய முறையில் அனைத்துப் பக்தர்களும் பங்கு பெறும் வண்ணம் குறைந்த கட்டணத்தில் குருபரிகார ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.வர முடிந்தவர்கள் நேரில் வந்து இந்த குரு பரிகார ஹோமங்களில் பங்கு பெறலாம் நேரில் வர இயலாதவர்கள் உரியக் கட்டணத்தை மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம் அனுப்பி வைத்தால் அவர்களுக்கு அர்ச்சனை / சங்கல்பம் செய்து கூரியர் தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.


திட்டைக்கு வருக ! தி(கு) ருவருள் பெறுக !

குருப்பெயர்ச்சியின் போது திட்டைக்கு வந்து இராஜயோகம் தரும் இராஜகுரு பகவானைதரிசனம் செய்யுங்கள். வந்து தரிசித்தவர்கள் பாக்கியவான்கள்.வர முடியாதவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.


செயல் அலுவலர்

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (குருபகவான் பரிகாரதலம் ).

திட்டை - 613 003, தஞ்சாவூர் மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04362 - 252858    அலைபேசி எண் : 9443445864