அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.


திட்டைக்கு வருக ! தி (கு)ருவருள் பெறுக !

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகத்தில் மகாப்ரளயம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பிரளம் ஜனத்தினரல் சூழப்பட்டது. உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அத்தகைய தருணத்தில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனின் திருவருளால் ஊழிப்பெருவெள்ளத்தின் மத்தியில் சுமார் பத்து மைல்கள் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதி மட்டும் நிலைத்திருத்தது. அம்மேட்டுப்பகுதியில் கோடி சூரியன் ஒரே சமயத்தில் உதையமானரற்போல் ஜோதிமயமான சிவலிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்திலிருந்து காட்சி தந்த சிவபெருமான் வேத வேதாந்த சாஸ்திர அறிவை அனைத்து உலகங்களுக்கும் தந்தருளினார். இறைவன் சுயம்புவாக அந்த மேட்டுப் பகுதியில் தோன்றியதால் ஸ்வயம்பூதேஸ்வர் (தான்தோன்றீஸ்வரர்) எனப் பூஜிக்கப்பட்டார். முதன் முதலில் வசிஷ்ட மகரிஷி இங்கு வந்து தவம் புரிந்து இறைவனைப் பூஜித்து பிரம்மஞானிகளில் முதன்மை பெற்றவராக விளங்கினார்.

வசிஷ்ட மகரிஷிக்கு அருள்புரிந்த காரணத்தினால் இத்திருத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்த இத்திருத்தலம் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பெருமை பெற்ற தலமாகும். திருக்கயிலாயம், கேதாரம், காசி, ஷ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்புத் தலங்களின் வரிசையில் 22-வது சுயம்புத் தலமாக விளங்குவது தென்குடித்திட்டை. திட்டை என்ற சொல்லுக்கு திட்டு அல்லது மேடு என்பது பொருளாகும். தென்குடி என்பது மனித உடல் திட்டை என்பது ஞானமேடு. மனித உடலில் மூலாதாரம் முதல் ஆன்ஞை உள்ளிட்ட ஆறு ஆதாரங்கள் பொருந்தியுள்ளன. முதலில் இறைவனைப் பற்றிய ஐய உணர்வு போன்றிகிறது. ஐயம் தெளிந்தபின் மெய்யுணர்வு தோன்றியது. இப்படி ஊரின் பெயரிலேயே ஞானமார்க்கம் மறைந்திருப்பது உணரத்தக்கது.


சக்கர தீர்த்தம்

இத்திருக்கோயிலில் எதிரில் அமைந்துள்ள சக்கர தீர்த்தம் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் உருவாக்கப்பட்டது. அனைத்துப் பாவங்களையும் போக்கவல்லது இந்தச் சக்கர தீர்த்தம். தீர்த்தத்தில் பக்தியுடன் புனித நீராடினால் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய பெருமான்களின் பேரருளைப் பெறலாம்.


சூல தீர்த்தம்

முன்னொரு காலத்தில் தண்டகனத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. கதிரவனின் கடும் கிரணங்களினால் குளங்களும், குட்டைகளும் வறண்டன. மழை பொய்த்தது. தெய்வாதீனமாக இந்தத் திட்டை திருத்தலத்தை வந்தடைந்த பசு, குதிரை, ஆடு, மாடு, முதலிய மிருகங்கள் தாகத்தினால் தொண்டை வறண்டு துன்புற்று வாடியதைக் கண்ட சிவபெருமாள், தன் சூலத்தால் பூமியைத் தோண்டி குளம் ஒன்றை உருவாக்கி அதில் தனது சிரசிலிருந்து கங்கை நீரை விட்டு நிரப்பினார். இறைவனின் சூலத்தால் உருவாக்கப்பட்டால் இக்குளம் சூலதீர்த்தம் எனப் பூஜிக்கப்பட்டது. அம்பிகை - மங்களாம்பிகை தரிசித்துப் பூஜிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் தரக்கூடியவள். மாங்கல்ய பலத்திற்கும் குடும்ப ஒற்றுமைக்கும் ரப்பிரசாதி இந்த மங்களாம்பிகை.


சந்திரனின் அபிஷேகம்

மூலவர் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரனின் விமானத்தில் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து குளிர் கிரணங்களை அந்தக் கல் ஈர்த்து அந்தக் கிராணங்கள் நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது நித்ய அபிஷேகம் நடைபெறும் அதிசயத்தை இன்றும் காணலாம்.


சிறப்பு குருபகவான்

சுவாமிக்கும் அம்பிகைக்குமிடையில் தனிச்சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரங்களில் பூரண சுபக்கிரகமான குருபகவான்.


இறைவி உலக நாயகி

இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவி உலகநாயகி என்னும் மங்களாம்பிகை அனைத்து களங்களையும் தரக்கூடியவள். இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளாள். மாங்கல்ய பலத்திற்கும், குடும்ப ஒற்றுமைக்கும் வழிபட வேண்டிய அன்னை இவள். சிறப்பு மூர்த்தி குருபகவான் நவக்கிரங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளைக்கூடத் தனது சுபப்பார்வையினால் தடுத்து நிறுத்தும் வல்லமை பிரகஸ்பதி என்று அனைவராலும் போற்றப்படும் குருபகவானுக்கு உண்டு.

எல்லாச் சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞானவடிவான ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி கோயில் கொண்டிருப்பார். சிவகுரு ஸ்தலங்களில் இந்த தெட்சிணாமூர்த்தியே குருவாகப் பாவித்து வழிப்படப்படுகிறார்.

ஆனால், தென்குடித்திட்டையில் ஸ்ரீ குருபகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் கிடையாது என்பதும் அறியத்தக்கது.

ராஜயோகம் தரும் திட்டை ராஜகுருபகவான்

" நாரணன் தன்னோடு நான்முகன் தானுமாய்

காரணன் அடிமுடி காண ஒன்னானிடம்

ஆரணங்கொண்டு பூசுரர்கள் வந்தடிதொழ

சீரணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே ! "

திருஞானசம்பந்தர்தேவாரம்

மூர்த்தி, தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினார்க்கு ஓர் வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே ! என்பது தாயுமானவர் வாக்கு.


அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் (மூர்த்தி)

ஆதிப்பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது. மும்முர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும் இருள் கவிந்தும் இருந்த உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு துதித்தனர். பார்வதி பரமேஸ்வரனின் அருளால் ஊழிப்பெருவௌ்ளத்தின் நடுவின் பத்து மைல் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதியைக் கண்டு வியந்தனர். அம்மேட்டுப்பகுதிலயில் ஜோதிமயமான லிங்கத்தை கண்டு பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவினையும் அருளினார். இறைவன்சுயம்புவாக தோன்றியதால் ஸ்வயம்பூதேஸ்வரர் (தான்தோன்றீஸ்வரர்) என அழைக்கப்பட்டார், வசிட்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.


தென்குடித்திட்டை (தலம்)

சம்பந்தப்பெருமானின் பாடல்களை வசதி கருதி இருவகையாகப்பிரிக்கலாம்.
1. தலத்து இறைவனைப்பாடியவை
2. தலத்தைப் பாடியவை
தலத்து இறைவனைப்பாடும் போது இங்கு இருக்கும் இறைவன் இன்னின்ன பெருமைகளை உடையவன் எனச் சிறப்பித்துப்பாடுவது, தலத்தைப் பாடும் போது இத்தகைய இறைவன் ிரும்பித்தங்கியிருக்கும் இடம் எதுவென்று கேட்பீராகில் இன்னதலேம என்று தலத்தின் பெருமையை உயர்த்திப்பாடுவதாக அமையும். இரண்டாவது முறையினைப் பின்பற்றி தென்குடித்திட்டை தலத்தைச் சிறப்பித்து சம்பந்தப்பெருமான் ஒரு பதிகம் பாடியுள்ளார்.


சந்திரனின் அபிஷேகம்

மூலவர் வசிஷ்டேஸ்வரரின் விமானத்தில் சந்திரகாந்தக்கல், வைத்துக் கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெறுகிறது. அந்தக்கல், அது நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை இப்போது காணலாம். அபிஷேக பிரியனான சிவனுக்குச் சந்திரனின் நித்யாபிஷேகம். தினம் ஒரு கலையாக தேய்வதற்குச் சாபம் பெற்ற சந்திரனைக் காப்பாற்றி தன் சிரசில் வைத்து சிவன் சந்திரசேகரர் ஆனார். அதற்கு நன்றிக்கடனாகச் சந்திரன் தன் அபிஷேகத்தைக் காலம் காலமாகச் செய்து வருகிறான்.


சனி பகவான்

சனிபகவான் பிறந்ததில் இருந்து அவரது பார்வையில் தீட்சண்யம் இருந்தது. அவரது பார்வையிட்ட இடங்களில் பல விபரீதங்கள் நிகழ்ந்தன. விநாயகப்பெருமான் பிறந்தநாள் விழாவைக் காண சனி பகவான் கைலாயம் சென்றார். அவர் பார்வை பட்டதால் விநாயகருக்குத் தலைபோகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பார்வதி தேவியார் சனீஸ்வரனைச் சபித்தார்.

சனி பகவான் திட்டைக்கு வந்து வேதமுறைப்படி இறைவனைப் பூசித்து ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து வந்தார். அவர் தவத்துக்கு மெச்சி இறைவன் அவரை கிரகநாதனாக அமர்த்தி அனுக்கிரகம் செய்தான்.

எனவே, சனிதோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம், அஷ்டமச்சனி மற்றும் ஏழரை நாட்டுச்சனியின் பிடியில் இருப்பவர்கள் திட்டைக்கு வந்து பசு தீர்த்ததில் நீராடி பசுபதீஸ்வரரைத் தரிசித்து இங்குள்ள நவக்கிரகத்தினை வலம் வந்து சனி பகவானை அர்ச்சனை செய்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.


சூரியன்

சிவ பக்தனான சுமாலியைக் கொன்றதால் பாவம் வரும் என்று பயந்த சூரிய பகவான் திட்டைதலத்துக்கு வந்து இறைவனை நினைத்து கடுந்தவம் புரிந்தான்.இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி சூரியனை கிரகநாதனாக அமர்த்தி காலசக்கரத்தை நடத்திச்செல்ல அனுமதி அளித்தான்.

சிம்மராசியில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள். இங்கு வந்து வழிபட நலம் பெறுவார்கள்.


நற்பலன்கள் யாருக்கு ?

ஒருவருடைய ஜென்மராசியில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் குருபகவான் வரும் போது நற்பலன்கள் நடக்கும்.


பரிகார செய்ய வேண்டியவர்கள் யார் ?

ஒருவருடைய ஜென்மஇராசியான 1ஆம் இடம் மற்றும் ஜென்ம இராசியில் இருந்து 3, 4, 6, 8, 10 ,12 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சரிக்கும் போது நற்பலன்களைத் தரமாட்டார் என்பது பொது விதி.


குருபரிகார ஹோமங்கள்

மேலும் இத்திருக்கோயிலில் எளிய முறையில் அனைத்துப் பக்தர்களும் பங்கு பெறும் வண்ணம் குறைந்த கட்டணத்தில் குருபரிகார ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.வர முடிந்தவர்கள் நேரில் வந்து இந்த குரு பரிகார ஹோமங்களில் பங்கு பெறலாம் நேரில் வர இயலாதவர்கள் உரியக் கட்டணத்தை மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம் அனுப்பி வைத்தால் அவர்களுக்கு அர்ச்சனை / சங்கல்பம் செய்து கூரியர் தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.


திட்டைக்கு வருக ! தி(கு) ருவருள் பெறுக !

குருப்பெயர்ச்சியின் போது திட்டைக்கு வந்து இராஜயோகம் தரும் இராஜகுரு பகவானைதரிசனம் செய்யுங்கள். வந்து தரிசித்தவர்கள் பாக்கியவான்கள்.வர முடியாதவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.


செயல் அலுவலர்

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (குருபகவான் பரிகாரதலம் ).

திட்டை - 613 003, தஞ்சாவூர் மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04362 - 252858    அலைபேசி எண் : 9443445864